உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதனையை நோக்கி திருஇருதய ஆண்டவர் கல்லுாரி

சாதனையை நோக்கி திருஇருதய ஆண்டவர் கல்லுாரி

திண்டுக்கல் நத்தம் ரோடு ரெட்டியபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியில் உள்ள திருஇருதய கலை அறிவியல் கல்லுாரியில் சிறந்த வகுப்பறை, ஆடிட்டோரியம், இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர் லேப்,அதிநவீன நுாலகம், செமினார் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் , கேண்டீன், விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பிற்கான ஆலோசனை, பணி ஏற்பாடு, தனித்திறமைகளை மேம்படுத்த நுண்கலை விழிப்புணர்வு,ஹிந்தி, ஆங்கில திறன் வளர்ப்பு பயிற்சிகளும் கற்று தரப்படுகிறது. இந்த கல்லுாரியை சேர்ந்த 10 மாணவர்கள் பல்கலை அளவில் பாட வாரியாக தரவரிசையில் சாதனை படைத்துள்ளனர். பிலிம் மேக்கிங், எடிட்டிங் படம் வரைதல், ஆங்கிலம், ஹிந்தி கற்பது, அழகு கலை, போட்டி தேர்வு, புகைப்பட கலை, டேலி, ஈ காமர்ஸ், வாகனம் ஓட்டுதல், அனிமேஷன், டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், நெட் ஒர்க் கிங் என பல வகை பயிற்சிகளும் வழக்கப்படுகின்றன.. 2020- -21ம் ஆண்டு வணிகவியலில் மதுரை காமராஜ் பல்கலை தேர்வில் முதல் ரேங்க் தமிழ், ஆங்கிலம் பிரிவில் 2-வது ரேங்க், வேதியியலில் 7,8,9-வது ரேங்க் என சாதனை மாணவர்களை உருவாக்கி உள்ளோம்.-இன்னாசி முத்து, முதல்வர், திருஇருதய கலை, அறிவியல் கல்லுாரி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ