மேலும் செய்திகள்
டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
14-Jul-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், போக்குவரத்து பணியாளர்கள் திண்டுக்கல் திருச்சி பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் பொன்செந்தில் தலைமை வகித்தார். வயது, பணி மூப்பு அடிப்படையில் பணிகள் வழங்க வேண்டும். கி.மீ., அடிப்படையில் பணி வழங்கும் புதிய நடைமுறை கூடாது. திண்டுக்கல் மண்டல நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் பேசினர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
14-Jul-2026