| ADDED : மார் 22, 2024 05:19 AM
திண்டுக்கல்: மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்குரிய ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொகுதிவாரியாக மார்ச் 24ல் நடத்தப்பட உள்ளன.லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி அலுவலர்கள், ஆசியர்களுக்கு பணி ஒதுக்கீடு நடந்துள்ளதை தொடர்ந்து , இவர்களுக்கு சட்டசபை தொகுதி வாரியாக மார்ச் 24 காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.இவை திண்டுக்கல் புனித மரியாள் மேல்நிலைப்பள்ளி, பழநி அக்சையா அகாடமி, ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி, ஆத்துார் சின்னாளபட்டி சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி, நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர். மகளிர் மேல்நிலைப்பள்ளி, நத்தம் துரைக்கமலம் அரசு மாடல் மேல்நிலைப்பள்ளி , வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவு நாளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள், அஞ்சல் ஓட்டுச்சீட்டு உட்பட அனைத்து விதமான படிவங்களைபூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.இதன் பயிற்சியை கண்காணித்து அறிக்கை அளிக்கவும், வருகைப்பதிவேடு பராமரிக்க தொகுதிவாரியாக பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.