உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சங்கர் பொன்னர் பள்ளிக்கு கோப்பை

சங்கர் பொன்னர் பள்ளிக்கு கோப்பை

தொப்பம்பட்டி : பழநி தொப்பம்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பி குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.கள்ளிமந்தயத்தில் செயல்பட்டு வரும் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப் பள்ளியில் நடந்த பழநி கல்வி மாவட்ட குறுவட்ட போட்டியில் 14 வயது மாணவர் பிரிவில் ஹரிஷ், மாணவியர் பிரிவில் தீபாஸ்ரீ, 17 வயது மாணவர் பிரிவில் சிவநிதின், லோகேஷ்வரன், மாணவியர் பிரிவில் தாரணி, 19 வயது மாணவர் பிரிவில் சுதர்ஷன், கவிராஜ், மாணவியர் பிரிவில் சிவதாரணி,புவிஷா சாம்பியன் பட்டங்களைப் பெற்றனர். சாம்பியன் பட்டத்தைப் பெற்று சுழற் கோப்பையை பெற்றனர்.வெற்றி மாணவர்களை திருப்பதி அருள்நெறி பள்ளி தலைமை ஆசிரியர் குப்பமுந்து, சங்கர் பொன்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரச்சுமராஜூ பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ