| ADDED : மே 26, 2024 04:51 AM
வேடசந்துார்: வேடசந்துார் அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த டூரிஸ்ட் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்தனர்.கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் டிராவல்ஸ் வேன் டிரைவர் கிரேன் 22. இவரது வேனில் பெங்களூர் ஐ.டி., கம்பெனியில் பணி புரியும் 12 பேர் கொடைக்கானல் செல்ல கரூர் திண்டுக்கல் ரோட்டில் சென்றனர். வேடசந்துார் தம்மனம்பட்டி பிரிவு அருகே வந்த போது முன்னால் சென்ற லாரியின் பின் வேன் மோதியது. வேன் டிரைவர் கிரேன் 22, பெங்களூர் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பரிசித் 25, நான்சி 23, தமன்னா 19, ஜஹானா 25, பிரசித்தா 25, சவுதியா 22, ஜாக்கிரி 24, லாவண்யா 22, மெஹந்தி தமன்யா 23, வினோதினி 22, குஜி 22, என 12 பேர் காயமடைந்தனர். வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.