மேலும் செய்திகள்
இனி கூகுள் பே-வில் இதை செய்தால் கட்டணம்!
21-Feb-2025
திண்டுக்கல்: பார்க்கிங் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் பழநிக்கு வரும் வாகனங்களுக்கான நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு சீசன் நேரங்களில் லட்சக்கணக்கானோரும், சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் வந்து செல்வர்.வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் உட்பட அடிப்படை வசதி இருப்பதாக கூறியே இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் போதிய பார்க்கிங் வசதி கிடையாது. தனியார் பார்க்கிங்கில் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இந்நிலையில் தற்போது நுழைவுக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் 1க்கு நாள் ஒன்றுக்கு ரூ.130 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிக்கு ரூ.100லிருந்து ரூ.115, வேனிற்கு ரூ.90 லிருந்து ரூ.100, காருக்கு ரூ.60லிருந்து ரூ.70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பக்தர்கள் கூறியதாவது: சுற்றுலா வாகனங்களுக்கு தான்கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் சொந்த வாகனங்களுக்கும் வசூலிக்கின்றனர். நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு தனியார் பார்க்கிங் வேறு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. குடிநீர் உட்பட எந்த வசதிகளும் இல்லை. கேட்டால் தேவஸ்தானம் வேறு, நகராட்சி வேறு என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர் என்றனர்.
21-Feb-2025