வித்யோதயா பள்ளி வெற்றி
திண்டுக்கல்: மதுரை சகோதயா பள்ளி குழுமம் நடத்திய சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பிரசித்தி வித்யோதயா பள்ளி வெற்றி பெற்றது.திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. ஸ்ரீஹரி 36, ேஹமந்த் 60, ஆர்யவ் கட்கர் 46 (நாட் அவுட்). எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா சி.பி.எஸ்.இ., பள்ளி 12.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 45 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சச்சின் 2 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.