உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவேகானந்தா பள்ளி சாதனை

விவேகானந்தா பள்ளி சாதனை

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி தேஜஸ்வினி 495 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 98, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி சாருநேத்ரா 487 மதிப்பெண்களுடன் 2ம் இடம், மாணவன் தினேஷ் 485 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 12 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல் 25 பேர் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விவேகானந்தா கல்வி குழுமத் தலைவர் ரங்கசாமி,துணைத்தலைவர் கலைவாணி, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, தமிழ் ஆசிரியை செல்வராணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ