| ADDED : மே 09, 2024 06:18 AM
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிப்பட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. இப் பள்ளி மாணவர்கள் 63 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். மாணவர்கள் வி.சசிகுமார் 566 மதிப்பெண்களுடன் முதலிடம் , எம். ஹரிஹரன் 564 மதிப்பெண் பெற்று 2ம் இடம், எம்.யாழினி 554 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேர் பெற்றனர். வணிகவியல்,கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் தலா 5 பேர், கணினி அறிவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களில் தலா 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 280 மதிப்பெண் பெற்ற வி.சசிகுமார் பிளஸ் 2வில் 566 எடுத்து முதலிடத்தையும், 229 பெற்ற எம்.ஹரிஹரன் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 564 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும் பெற்று சாதித்தனர். சாதனை மாணவர்களை விவேகானந்த கல்வி குழுமத்லைவர் ரங்கசாமி, துணைத்தலைவர் கலைவாணி பாராட்டினர்.