உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை

பழநியில் இளநீர் வியாபாரி வெட்டிக்கொலை

பழநி, : பழநி சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பேக்கரி பகுதியில் இளநீர் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். பழநி கொடைக்கானல் சாலை சந்திப்பு ஆலமரத்துகளத்தை சேர்ந்தவர் ஆனந்தன் 41. சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலை பேக்கரி பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அங்கு வந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளநீர் வெட்ட வைத்திருந்த அரிவாளால் ஆனந்தன் தலையில் வெட்டி அந்த நபர் தப்பினார். பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆனந்தன் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை