உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வகையில் பழநி நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாலை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பழநி கீழரத வீதியில் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல் நாளில் வருகை புரிந்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் சார்பில் அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் 20 மாணவர்களுக்கு கணக்கு துவங்கி வைக்கப்பட்டது. பழநி வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் குமார், தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை