உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எங்கே செல்கிறோம் நாம் விடுமுறையில் பாராக மாறிய பள்ளிகள் ஆய்வு சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி

எங்கே செல்கிறோம் நாம் விடுமுறையில் பாராக மாறிய பள்ளிகள் ஆய்வு சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி

கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் கிராமங்களில் உள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் இல்லை. இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ளன. இந்த நிலையில் பள்ளிகளை ஆய்வு செய்ய சென்ற ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிகளை சிலர் மதுபான கூடமாக மாற்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மது அருந்தி விட்டு வகுப்பறை வரண்டாக்களில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்களை விட்டுச் சென்று உள்ளனர்.கிராம மாணவர்கள் அதிகதுாரம் செல்லாமல் கிராமங்களிலே படித்து வளர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதை கண்ட ஆசிரியர்கள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை