உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய தோட்டத்தில்புகுந்த காட்டுமாடுகள்

விவசாய தோட்டத்தில்புகுந்த காட்டுமாடுகள்

நத்தம்: நத்தம் சுற்று பகுதி விவசாய தோட்டங்களில் புகுந்த காட்டுமாடுகளால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.நத்தம் சுற்று பகுதியில் அழகர்மலை, கரந்தமலை, சிறுமலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் உள்ளது .இந்த மலைகளை சுற்றி 30க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் மாமரங்கள்,சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. மலைகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் காட்டுமாடுகள் பயிர், மர வகைகளை ஒடித்து சேதப்படுத்தியது. விவசாயிகள் கூறுகையில், 'ஆண்டுதோறும் காட்டுமாடுகள் தொந்தரவுகள் அதிகரித்து வருகிறது.இதற்கு வனத்துறை நிர்வாகம் தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், தடுப்பு வேலிகளும் அமைக்க வேண்டும். தண்ணீர் பருகுவதற்கு மலைகளை சுற்றிஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ