உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆடலுார் ரோட்டில் காட்டு மாடுகள்

ஆடலுார் ரோட்டில் காட்டு மாடுகள்

கன்னிவாடி: கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, எலுமிச்சை, தென்னை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. பல நேரங்களில் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத் துவங்கியது. ஆடலுார், பன்றிமலை, அரியமலை, பேத்தரைக்காடு, காந்திபுரம் பகுதிகளை தொடர்ந்து, ஆத்துார் நீர்த்தேக்க அடிவாரம், தருமத்துப்பட்டி கோம்பை, கன்னிவாடி நாயோடை நீர்த்தேக்க அடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்தது. ஆடலுார், பன்றிமலை பகுதிகளில் ஒற்றை காட்டுமாடு,சமீப நாட்களாக முகாமிட்டுள்ளது. முருக்கடி ஆடலுார் மெயின் ரோடு குடியிருப்பு உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் பகுதியில் உலா வர துவங்கியது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ