நகை திருடிய பெண் கைது
ஒட்டன்சத்திரம்: பழநியை சேர்ந்த தங்க பாண்டி மனைவி சங்கீதா 37 . தனியார் பஸ்சில் வத்தலக்குண்டு சென்றார். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது மதுரை அலங்காநல்லுாரை சேர்ந்த நாகலட்சுமி 51, சங்கீதாவிடமிருந்த 7 பவுன் நகையை திருடினார். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த ஒட்டன்சத்திரம் போலீசார் நாகலட்சுமியை கைது செய்து 7 பவுன் நகையை மீட்டனர்.