உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி

நடுரோட்டில் தீக்குளித்த தொழிலாளி

வடமதுரை: செங்குறிச்சி இந்திரா காலனி சேர்ந்த கட்டட தொழிலாளி பாலசுப்பிரமணி 51. வெளி நாட்டில் வேலை பார்த்த இவர் உடல் நல குறைவு பிரச்னையால் சமீபத்தில் சிகிச்சை எடுக்கும் நோக்கில் ஊர் திரும்பினார். மதுஅருந்தியதை மனைவி கண்டித்ததால் பாலசுப்பிரமணி கம்பிளியம்பட்டி ரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை