உலக மக்கள் தொகை தினம்
நத்தம், ஜூலை 12- நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது. மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநர் கவுசல்யாதேவி தலைமை தாங்கினார். முதன்மை மருத்துவ அலுவலர் சின்னஇளங்கான், குழந்தைகள் நல மருத்துவர் சதீஸ்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் வயது திருமணம், முறையற்ற கருத்தரித்தல், பிரசவத்தில் இடைவெளி, நிரத்தர மற்றும் தற்காலிக கருத்தடை முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இளம் வயதில் திருமணம் வேண்டாம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. புள்ளி விபர உதவியாளர் பத்மப்ரியா, வட்டார சுகாதார புள்ளியலாளர் அஸ்வினி, டாக்டர்கள், நர்ஸ்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.