10 டன் கொப்பரை தேங்காய் ஏலம்
பழநி: பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏலம் மையத்தில் 10 டன் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது.பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் பிரதி வாரம் புதன் கிழமை தோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். இதற்கு செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணிக்குள் கொப்பரை தேங்காய்களை ஏல மையத்திற்கு கொண்டு வர வேண்டும். இதில் உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.நேற்று (ஜூலை 2) பழநி, ஒட்டன்சத்திரம், வெள்ளகோயில் காங்கேயம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 96 விவசாயிகள் ஏலத்தில் பங்கு பெற்றனர். எண்ணெய் ஆலை பிரதிநிதிகள், ஏலம் எடுக்கும் நபர்கள் ஏலம் எடுத்தனர்.நேற்று நடந்த ஏலத்தில் முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.252.10 க்கு விற்பனை ஆனது. 10 டன் கொப்பரை தேங்காய் ஏலம் இடப்பட்டது. பழநிச்சரக துணைப்பதிவாளர் கவுரிமீனா அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்