உள்ளூர் செய்திகள்

1008 பால்குட ஊர்வலம்

பழநி, : பழநி முருகன் கோயில் உபகோவிலான மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் 1008 பால்குடம் ஊர்வலம், அன்னாபிஷேகம் நடைபெற்றது.மடத்திலிருந்து துவங்கிய 1008 குடம் ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது. உச்சிக்கால பூஜையில் பாலாபிஷேகத்துடன் உற்ஸவர் சாந்தி,மாலையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.ஆதவன் புட்ஸ் நிர்வாகி மெர்சி, சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், கார்த்திகேயன், செந்தில் குமார், விஜயகுமார், கன்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜேபி சரவணன், பொருளாளர் செந்தில்குமார், வ.உ.சி. மன்ற கவுரவத் தலைவர் அசோக், செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர், செய்தி தொடர்பாளர் முருகேசன், குகன், நிர்வாக குழு உறுப்பினர் சங்கர், குமார், ஐயப்பன், துர்கா கணேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி