உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆட்டோ விபத்தில் 11 சிறார்கள் காயம்

 ஆட்டோ விபத்தில் 11 சிறார்கள் காயம்

பழநி: பழநி கோதைமங்கலம் ரோடு நல்லம்மாள் நகர் பகுதியில் பள்ளி சிறார்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 11 சிறார்கள் காயமடைந்தனர். பழநி வி.கே. மில்க்சை சேர்ந்த குணசேகரன் 57, தனது ஆட்டோவில் நேற்று மாலை 5 :00 மணிக்கு தனியார் பள்ளிகளில் இருந்து 11 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஏற்றி வந்தார். நல்லம்மாள் நகர் பகுதியில் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் ஆட்டோ டிரைவர் உட்பட 12 பேர் காயமடைந்தனர். பழநி தாசில்தார் பிரசன்னா காயமடைந்த மாணவிகளை மருத்துவமனையில் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை