12 பவுன் செயின் பறிப்பு
பழநி: பழநி சண்முகபுரம் ராஜாமணி 68. இவர் பழநி ஆர்.எப்., ரோட்டில் பொருட்கள் வாங்கி விட்டு அவரது வீட்டிற்கு நகராட்சி சாலை வழியாகச் சென்றார். அவர் பின்னால் வந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.