இளைஞருக்கு 15 ஆண்டு சிறை
திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியில் 2024ல் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த அருள் பிரசாத்தை 21, சாணார்பட்டி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் மைதிலி வாதாடினார். அருள் பிரசாத்துக்கு 15 ஆண்டு சிறை , ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்திய தாரா தீர்ப்பு வழங்கினார்.