மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
11-Mar-2025
திண்டுக்கல்: காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மக்கள், இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 227 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் உயர் கல்வி மருத்துவப் படிப்பு பயில ாணவருக்கு கல்வி உதவித்தொகை ரூ.50 ஆயிரம் உட்பட 19 பயனாளிகளுக்கு ரூ.8.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தொழிலாளர் உதவி ஆணையாளர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன் கலந்துகொண்டனர்.தாடிக்கொம்பை அடுத்த தா.அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர், கழிப்பறை, மயான பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.எரியோட்டை அடுத்த குண்டாம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் வீடின்றி தவிக்கிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர்.
11-Mar-2025