உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 24 மணி நேரம்: மாடு உரிமையாளர்களுக்கு கெடு

24 மணி நேரம்: மாடு உரிமையாளர்களுக்கு கெடு

திண்டுக்கல்: மாநகராட்சி பகுதிகளில் பிடிபடும் மாடுகள் 24 மணி நேரம் மட்டுமே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். அதன்பின் கோசாலைக்கு அனுப்பப்படும் என மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.அதன்படி மாநகர் நகர்நல அலுவலர் ராம்குமார் தலைமையில் 2 தினங்களுக்கு முன் மாடு உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முதல் முறை பிடிபட்டால் ரூ.2000, 2ம் முறை ரூ.5000, அதற்குமேல் பிடிபட்டால் ஏலத்திற்கு செல்லும் என்பது போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள்,எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.இந்நிலையில் நேற்று மட்டும் 15 மாடுகள் பிடிப்பட்டது. அதன் உரிமையாளர்கள் வர வழைக்கப்பட்டு ஆதார், அலைபேசி எண்கள் பெறப்பட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.மாநகர நல அலுவலர் ராம்குமார் கூறுகையில், ''மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் அபராதம் விதிப்பதோடு போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். அதே நேரத்தில் கைப்பற்றப்படும் மாடுகள் 24 மணி நேரம் மட்டுமே மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். அதற்குள் உரிமையாளர்கள் வர வில்லையெனில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோசாலைக்கு அனுப்பப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ