மேலும் செய்திகள்
குறைதீர்வு கூட்டத்தில் 262 மனுக்கள்
26-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள், வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 262 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஊன்றுகோல், மடக்கு குச்சி, மடக்கு சக்கர நாற்காலி என பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் ஹென்றிபீட்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி, பயிற்சி கலெக்டர் திவ்யலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
26-Oct-2026