மேலும் செய்திகள்
மினி வேன் மோதி காயம்
05-Oct-2024
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுப்பட்டியில் சாலையோர மரத்தில் அரசு பஸ் மோதி விபத்தில் 35 பேர் காயமடைந்தனர்.செந்துறை- கோட்டைப்பட்டியில் இருந்து அரசு டவுன் பஸ் நத்தம் நோக்கி வந்தது. கோபால்பட்டியை சேர்ந்த மோகன் 52, ஓட்டினார். நத்தம் அருகே புதுப்பட்டி பகுதியில் எதிரே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர மரத்தில் மோதியது. இதில் டிரைவர் இடிபாடுகளில் சிக்கினார். நத்தம் தீயணைப்பு துறையினர் , பொதுமக்கள் இணைந்து டிரைவரை மீட்டனர். தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.பயணிகள் நதியா 20, சிவலிங்கம் 54, பொன்னழகி 38, சண்முகவடிவேல் 60, கணேசன் 50, சபுராபீவி 37, உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
05-Oct-2024