உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 37 டன் காய்கறி விற்பனை

37 டன் காய்கறி விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் உழவர் சந்தையில் தீபாவளியையொட்டி 37 டன் காய்கறிகள் விற்பனையானது. திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனியில் உழவர் சந்தையில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.வழக்கமாக 10 டன் முதல் 12 டன் வரை காய்கறிகள் விற்பனை ஆகும். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. 2 நாட்களில் 37 டன் காய்கறிகள் விற்பனையாகி உள்ளது. இதில் தக்காளி 4 டன், சின்ன வெங்காயம் 2 டன், பல்லாரி 2 டன், உருளை 1.50 டன், பீட்ரூட் 1 டன், கேரட் 1 டன், கத்தரி 1 டன் என விற்பனையானது. இதனால் வழக்கத்தைவிடவும் வேளாண் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கு இருமடங்கு கூடுதல் வருமானம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ