உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குறைதீர் கூட்டத்தில் 378 பேர் முறையீடு

குறைதீர் கூட்டத்தில் 378 பேர் முறையீடு

திண்டுக்கல்: இலவச வீட்டுமனைப்பட்டா, அடிப்படை வசதிகள் தேவை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 378 பேர் மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் முறையிட்டனர்.கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில் 378 மனுக்கள் பெறப்பட்டதில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 33 துாய்மை காவலர்களுக்கு ரூ.88 ஆயிரம் மதிப்பிலான ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.திண்டுக்கல் மாநகராட்சி 33-வது வார்டு மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், 60 ஆண்டுகளாக வசிக்கும் இடத்துக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். கொடைக்கானல் அஞ்சுவீடு கிராம மக்கள் வழங்கிய மனுவில், கோயில் நிலத்தை போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களையும் ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய மாநில தலைவர் கர்ணன் தலைமையில் அளித்த மனுவில்,நிலக்கோட்டை, சக்கையநாயக்கனுார் கிறிஸ்தவ சர்ச் முன்பு பஸ் ஸ்டாப்பில் மின்விளக்கு, நிழற்குடைகள் இருந்தது. 2023ல் 4 வழிச்சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்டது. தற்போது பணிகள் முடிந்தும் மீண்டும் வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.

தரையில் துாய்மை காவலர்கள்

*நத்தம், வடமதுரை, வேடசந்துார், குஜிலியம்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும் துாய்மை காவலர்களுக்கான ஊக்கத்தொகை பெற 30 க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் வரவழைக்கப்பட்டிருந்தனர். கூட்டரங்கில் அனைத்து அலுவலர்களும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க துாய்மை காவலர்கள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். சிலர் இது குறித்து பேசியதும் ஆங்காங்கே இருந்த நாற்காலிகளை கொண்டு வந்தனர். ஆனால் அவையும் அனைவரும் உட்காரும் வகையிலான எண்ணிக்கையில் இல்லை.

தாமதமாக வந்த கலெக்டர்

குறைதீர் கூட்டம் காலை 10:30 க்கு தொடங்கும் என்ற நிலையில் 11:30 வரை கலெக்டர் சரவணன் வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே மனுக்களை வாங்கினர். 11:00 மணிக்கு மேல் அலுவலகம் வந்த அவர் முகப்பு வாசலில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்களை பார்வையிட்டும், வாங்கிக்கொண்டும் இருந்தார். 11:30 மணிக்கு மேல் மாற்றுத்திறனாளிகளை சந்தித்தார். கூட்டரங்கிற்கு வரும்போது தாமதம் ஆனது. இதனால் பொதுமக்கள் காத்திருந்தனர். கீழ் தளத்தில் காத்திருந்த மக்களை போலீசார் அடைத்து வைத்து சிறிது சிறிதாக அனுப்பினர். கலெக்டர் குறைதீர் நாட்களில் விரைவாகவே வந்து மக்களின் மனுக்களை பெற்றபின் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ