4 கடைகளுக்கு சீல்;173 கிலோ குட்கா பறிமுதல்
ஆத்துார்: ஆத்துார் பகுதியில் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் பித்தளைப்பட்டி அருகே வாகன ஆய்வில் ஈடுபட்டனர். காரில் கொண்டு வரப்பட்ட 160 கிலோ குட்கா, புகையிலை, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த தங்கதுரையை 33, கைது செய்தனர்.பித்தளைப்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, தருமத்துப்பட்டி பகுதி கடைகளில் நடந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். அதை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு கடைகள் சீல் வைக்கப்பட்டன.-