உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராமேஸ்வரத்தில் 44 செ.மீ., மழை கொட்டியது; அதிக மழை பொழிவு முழு விபரம் இதோ!

ராமேஸ்வரத்தில் 44 செ.மீ., மழை கொட்டியது; அதிக மழை பொழிவு முழு விபரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் (44 செ.மீ) மழை பதிவாகியுள்ளது.தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 438 மில்லி மீட்டர் (44 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்,ராமநாதபுரம்- 125.60மண்டபம்- 271.20ராமேஸ்வரம்- 438.00பாம்பன்- 280.00தங்கச்சிமடம்- 338.40பள்ளமோர்குளம்- 50.70திருவாடானை- 12.80தொண்டி- 7.80வட்டானம்- 12.80தீர்த்தாண்டதானம்- 20.20ஆர்.எஸ்.மங்கலம்- 14.90பரமக்குடி-25.60முதுகுளத்தூர்-49.00கமுதி- 49.00கடலாடி- 73.20வாலிநோகம்- 65.60மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 114.68 மி.மீ., மழை பெய்துள்ளது. இன்றும் (நவ.,21) அதிகனமழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரத்திற்கு 'ரெட் அலர்ட்'எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்

ஸ்ரீவைகுண்டம்- 42.30தூத்துக்குடி-23.20திருசெந்தூர்- 61.50காயல்பட்டினம்-43.00குலசேகரப்பட்டினம்-20.00சாத்தான் குளம்-22.20கோவில்பட்டி- 12.00கழுகுமலை- 14.00கயத்தார்- 18.00கடம்பூர்- 40.00எட்டையாபுரம்- 14.80விளாத்திகுளம்-37.00ஓட்டம்சத்திரம்- 26.00மணியாச்சி- 25.50வேடநத்தம்- 32 இளையான்குடி- 27 ஒட்டப்பிடாரம்- 26

தலைமை ஆசிரியர் முடிவு

ராமேஸ்வரத்தில் மேகவெடிப்பு காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARI KUMAR
நவ 21, 2024 10:02

ராமேஸ்வரத்தில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி