மேலும் செய்திகள்
'ரூம்' போட்டு யோசித்து 40 சவரன் திருடியவர் கைது
04-Jun-2025
பா.ஜ., பிரமுகர் வீட்டில் 40 சவரன் நகை கொள்ளை
26-Jun-2025
வடமதுரை: மொட்டை மாடி வழியாக கதவை உடைத்து, 50 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சித்துாரை சேர்ந்தவர் பழனிக்குமார், 39; 'எல்இடி லைட்' மற்றும் 'டெக்கரேஷன்' பொருட்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் கோவை சென்றார்.நேற்று திரும்பி வந்தபோது, வீட்டின் மொட்டை மாடி பின்புற கதவு திறந்து கிடந்தது. மாடி வழியே வீட்டினுள் நுழைந்த கொள்ளையர், பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், 20,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Jun-2025
26-Jun-2025