மேலும் செய்திகள்
அடகு வைத்த நகையை திருப்பி தராதவர் மீது வழக்கு
16-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் திருச்சி ரோடு புங்கோடையை சேர்ந்தவர் பரசுராமன் 62. தனியார் மில்லில் கூலி வேலை செய்கிறார். இவரும், சீலப்பாடி ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்த ஆதிநாராயணன் 65, நண்பர்களாக பழகினர். 2012ல் குடும்பத்தேவைக்காக 60 பவுன் நகையை ஆதிநாராயணனிடம் அடமானமாக கொடுத்து ரூ.12லட்சத்தை பரசுராமன் கடனாக பெற்றார். வாங்கிய கடனுக்கு வட்டி, அசல் தொகையை கொடுக்க சென்றபோது நகையை திருப்பித்தர ஆதிநாராயணன் மறுத்துள்ளார். தாலுகா போலீசில் பரசுராமன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.,அங்கமுத்து விசாரிக்கின்றனர்.
16-Oct-2025