உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 7 பேர் கைது

பழநி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 7 பேர் கைது

பழநி:பழநி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கேரளாவை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.பழநி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான், யானை, காட்டுமாடு, காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கு விலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் கொடைக்கானல் சாலை பிரிவில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற கேரள பதிவு எண்களை கொண்ட இரு கார்களில் இருந்தவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களிடம் துப்பாக்கி இருந்தது தெரியவர வனச்சரகர் கோகுல கண்ணன் புகாரில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது ரபிக் 43, நெகாஸ் 32, அப்துல்லத்தீப் 55, முஸ்தபா 54 ,பழநி ஆயக்குடியை சேர்ந்த ஷேக் அப்துல்லா 41, பேச்சிமுத்து 27, கர்ணன் 30, ஆகியோரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், இரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை