உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 70 சதவீதம் பேருக்கு மகளிர் உதவி தொகை : அமைச்சர் சக்கரபாணி அமைச்சர் சக்கரபாணி தகவல்

70 சதவீதம் பேருக்கு மகளிர் உதவி தொகை : அமைச்சர் சக்கரபாணி அமைச்சர் சக்கரபாணி தகவல்

ஒட்டன்சத்திரம்: ''ஒட்டன்சத்திரம் தொகுதியில் 70 சதவீதம் பேருக்கு மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது ''என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். பொருளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை , புதிய ரேஷன் கார்டுகள், முதலமைச்சர் காப்பீட்டு அட்டை, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியை வழங்கிய அவர் பேசியதாவது: ஒட்டன்சத்திரம் தொகுதியில் 70 சதவீதம் பேர் மகளிர் உதவித்தொகை பெற்று வருகின்றனர். விடுபட்ட தகுதியான மகளிருக்கும் விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்க உள்ளோம். தமிழ்நாட்டில் 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 3000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 300 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ.,க்கள் குமரன், தாஹிரா, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், தங்கம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !