உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயம்

 பள்ளி வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாணவர்களை அழைத்து வந்த தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். திண்டுக்கல் சீலப்பாடி அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. திண்டுக்கல், சீலப்பாடி, முள்ளிப்பாடி, ரெட்டியார்சத்திரம், புதுார், அடியனுாத்து உட்பட பல்வேறு இடங்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். நேற்று காலை திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 29 மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. வேனை திண்டுக்கல் சாலையூரைச் சேர்ந்த கண்ணதாசன் 36, ஓட்டினார். பள்ளியின் நுழைவுவாயிலை கடந்து செல்ல முற்பட்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. வேனை கட்டுப்படுத்த பிரேக் பிடித்தப்போதும் சறுக்கலான இடம் என்பதால் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. எட்டு மாணவர்கள் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ