மேலும் செய்திகள்
கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் சிறைபிடிப்பு
04-Nov-2026
நத்தம்: நத்தம் எஸ்.ஐ., அபினேஷ் தலைமையிலான போலீசார் பூதகுடி-சடையம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சடையம்பட்டி முருகேசன் 51, பூதகுடி ராஜேந்திரன் 44, ராஜாங்கம் 44, சடையம்பட்டி சசிகுமார் 40, குமரேசன் 36, என ஐவர் பணம் வைத்து சூதாடியது தெரிந்தது. ஐவரிடம் இருந்து ரூ.9600, சீட்டுக் கட்டுகளை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். அதுபோல் செந்துறை-அடைக்கனுார் பகுதியில் ரோந்து சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடிய போடிக்கம்பட்டி ஜனார்த்கார்த்திகேயன் 29, பழனிபட்டி பாண்டித்துரை 47, காட்டுராஜா 47, பெரியூர்பட்டி குமார் 38, ஆகிய நால்வரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டுக் கட்டுகள், பணத்தையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
04-Nov-2026