உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளத்தில் பாய்ந்த கார்

பள்ளத்தில் பாய்ந்த கார்

வடமதுரை: கோயம்புத்துார் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாசாணி மோனிஷா 35. இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தனது தந்தை ஜெயபாலன் 65, தாய் அம்சவேணி 60, குடும்ப நண்பர் ஆண்டனி 33, தனது 2 வயது மகள் ஆகியோருடன் காரில் உடுமலைப்பேட்டை உறவினர் வீட்டுக்கு சென்றார். வடமதுரை நாடுகண்டனுார் பிரிவு பகுதியில் சென்றபோது காரின் பின்பக்க டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஜெயபாலன் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி