அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்: ஒருவர் பலி
எரியோடு:திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டும் செல்லும் வழியில் டூவீலர் மீது மோதியதில் ஊராட்சி ஊழியர் இறந்தார்.கோவிலுாரில் இருந்து நேற்று காலை திண்டுக்கல் சென்ற அரசு டவுன் பஸ்சை வடமதுரை குரும்பபட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார் ஓட்டினார். தொட்டணம்பட்டி பகுதியில் வரும்போது ரோட்டை கடந்த அப்பகுதியை சேர்ந்த மீனாட்சி, மாரிமுத்து மீது பஸ் மோதியது காயமடைந்த இருவரும் அப்பகுதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசாரின் விசாரணைக்கு பின் பஸ்சை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். தொட்டணம்பட்டி பகுதியில் சென்ற போது டூவீலரில் முன்னால் சென்ற கொம்பேரிபட்டியை சேர்ந்த ஊராட்சி குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் காளியப்பன் 50, மீது மோதியது. இதில் அவர் இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.