உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

வடமதுரை ; வடமதுரை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. கமிஷனர் நளினா, ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். தற்போதைய மழைக்காலத்தில் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் தேங்காமல், நோய் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. துணை பி.டி.ஓ., சரோஜா நன்றி கூறினார்.ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் அய்யம்மாள் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காயத்ரி தேவி, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வடிவேல் முருகன் , காமராஜ் , ஒன்றிய பொறியாளர் விஜயராகவன், கணக்காளர் ஜெகதீஷ் கலந்து கொண்டனர்.நத்தம்: -நத்தம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் குமாரவேல், மகுடபதி , துணை த்தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி