காதலர்களுக்குள் தகராறு வாலிபருக்கு வெட்டு
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டு வாலிபர் வெட்டப்பட்டார். வேடசந்துார் முருநெல்லிகோட்டையை சேர்ந்தவர் சக்தி முனியப்பன் 28. பி.எட்., முடித்துள்ள இவர் போலீஸ் தேர்வுக்கான பயிற்சி எடுத்து வருகிறார். இவரது வீட்டருகே உள்ள மனோஜ் குமார் 22, சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு எழுந்த நிலையில் பெண் மறுக்கவே அவரை வெட்டுவேன் என காதலன் கூறி உள்ளார். இதை சக்தி முனியப்பனிடம் இளம் பெண் கூறி உள்ளார். அப்படி பேசுபவரிடம் ஏன் பழகுகிறாய் என சக்தி முனியப்பன்கூறி உள்ளார். இதையறிந்த மனோஜ்குமார் கத்தியால் சக்தி முனியப்பனை வெட்டினார். அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேடசந்துார் போலீசார் மனோஜ் குமாரை தேடி வருகின்றனர்.