சொந்த காலில் நிற்க வைக்க அரிய முயற்சி
பழநி : மாணவர்களின் தனித்திறமையை வெளிக்காட்டுவதற்காக தான் ஆண்டு விழாக்கள் நடத்தப்படுகிறது. இப்படிதான் மாணவர்களின் திறமையை அழகாக கொண்டு வந்திருக்கிறது பழநி அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ.,மேல் நிலைப்பள்ளி. இங்கு நடந்த ஆண்டு விழாவில் பங்கேற்றவர்கள் மனம் திறந்ததாவது. பெருமையாக உள்ளது
புருஷோத்தமன், தாளாளர், அக் ஷயா அகடாமி, பழநி: கல்வியுடன் ஒழுக்கம், திறமையை மாணவர்களின் மத்தியில் வளர்க்கும் வழிமுறைகளை கற்று தருகிறோம். மாணவர்களால் நிர்வாகமும் ஆசிரியர்களும் பெருமை படுகிறோம். மாணவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க எது உதவுமோ அதுவே உண்மைக்கல்வி என்கிறார் சுவாமி விவேகானந்தர். சாதிக்கும் மாணவர்கள்
பட்டாபிராமன், செயலாளர், அக் ஷயா அடாமி, பழநி: போதனையுடன் நிற்காமல் சாதனை படைக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சாதனை செய்ய வழிகாட்டுவது தான். ஆர்வத்திலும் அறிவியல் சிந்தனையிலும் தொழில் நுட்பத்தினை விரும்பும் நிலை மாணவர்களுக்கு உருவாகும். இதுமட்டுமில்லாமல் தொழில் நுட்பம், மருத்துவத்துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். 26 வகையான கலை நிகழ்ச்சிகள்
பிரசன்ன சிவக்குமார், முதல்வர், அக் ஷயா அகாடமி, பழநி: நவீன தொழில் நுட்பத்திற்கேட்ப கல்வி முறையை கடை பிடிப்பதால் சிறந்த மாணவர்களை உருவாக்குகிறோம். இந்த ஆண்டு விழாவில் 26 வகையான கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாநிலங்களின் சிறப்பு, நவீன திருவிளையாடல் கரிகால் சோழனின் சிறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் பார்த்து ரசித்தனர். நேரலையில் 20 ஆயிரத்திற்கும் மேலானோர் பார்த்தனர். மாணவர்களை ஊக்கு விக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. பெற்றோர் வழிகாட்ட வேண்டும்
சிபின், ஏ.எஸ்.பி.,திண்டுக்கல்: சமூகம் போட்டிகள் நிறைந்தது. எதிர்காலம் பற்றி பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆனால் வெளி உலகம் பணிச்சுமைகள் கூடியதாக இருக்கும். சமூக வலைதளம் என்பது எதிர்மறை, நேர்மறை விளைவுகளை கொண்டது. மாணவர்கள் நேர்மறை விளைவுகளை மட்டுமே அதிலிருந்த எடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகள் இடையே உறவு முறை சுமுகம் வேண்டும். பெற்றோர்களும் வழிகாட்ட வேண்டும். ஊக்கப்படுத்துகின்றனர்
தர்ஷினி, மாணவி, பழநி: எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கல்வி மட்டுமின்றி மற்ற கலை சார்ந்தவைகளும் பள்ளியில் கற்பிக்கின்றனர். நேர்மை, கடமை, உண்மை, உழைப்பு எப்படி கடை பிடிக்க வேண்டும் சாதனை மாண வர்களாக மாறுகிறோம். ஆசிரியர்களும் எங்களை ஊக்கப்படுத்துகின்றனர்.