உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் நிரம்பிய சின்ன குளம்

மழையால் நிரம்பிய சின்ன குளம்

அம்பிளிக்கை: அம்பிளிக்கை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மூன்று ஆண்டு பின் சின்ன குளம் நிரம்பி மறுகால் சென்றது. ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு தங்கச்சியம்மாபட்டி, காவேரி அம்மாபட்டி, அம்பிளிக்கை சுற்றிய கிராம பகுதிகளில் கனமழை பெய்தது. அம்பிளிக்கை பகுதியில் உள்ள சின்ன குளம் மூன்று ஆண்டுகள் பின் நிரம்பி மறுகால் சென்றது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ