உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுரோட்டில் விழுந்த மரம்:போக்குவரத்து பாதிப்பு

நடுரோட்டில் விழுந்த மரம்:போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நேற்று பெய்த மழையால் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் வாசலில் நின்ற 30 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் சில வாரங்களாக அடிக்கடி மழை பெய்யும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரோட்டோர வியாபாரிகள் முதல் வாகன ஓட்டிகள் வரை வெளியில் வர முடியாமல் வீட்டில் இருந்தனர். இந்நிலையில் நேற்றும் காலை முதல் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில் மதியம் 3:00 மணிக்கு கனமழை பெய்தது. அப்போது திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் வாசலில் நின்ற 30 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்து அருகிலிருக்கும் ரோட்டில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ்,வீரர் புகழேந்தி,மாநகராட்சிபொறியாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் ரோட்டில் சாய்ந்து கிடந்த வேப்பமரத்தை துண்டு துண்டாக மரம் அறுக்கும்இயந்திரம் மூலம் அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி