உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த காற்றாலை ஏற்றிச் சென்ற லாரி 8 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த காற்றாலை ஏற்றிச் சென்ற லாரி 8 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் காற்றாலை இறக்கையை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்புக்குள்ளாகி நெரிசல் ஏற்பட்டது. துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திண்டுக்கல் நோக்கி வந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு அம்மையநாயக்கனுார் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி வந்த போது டிவைடரில் மோதியதில் லாரியின் முன்பக்கம் திண்டுக்கல் ரோட்டிலும், லாரியில் ஏற்றப்பட்ட இறக்கை மதுரை ரோட்டிலும் கவிழ்ந்தன. இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. லாரியை மீட்கும் வகையில் ஒருவழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு நான்கு கிரேன்கள் மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டன. நான்கு கிரேன்களாலும் இறக்கை, லாரியை மீட்க முடியவில்லை. இதனால் மாலை 4:30 மணி வரை போக்குவரத்து சரி செய்யப்படாமல் ஒருவழிப்பாதையிலே வாகனங்கள் சென்று வந்தன. எட்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போக்குவரத்து பாதிப்பால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்ல நெரிசல் ஏற்பட்டது. மேலும் சில கிரேன்களை வரவழைத்து மீட்பு பணியை துரிதப்படுத்த போக்குவரத்து போலீசார் முயற்சித்து வருகின்றனர். காற்றாலை இறக்கையை ஏற்றிய லாரியை பீஹாரைச் சேர்ந்த சுதோஷ்குமார் ஓட்டி வந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு லாரியை ஓட்டி வந்தவர் துாக்கத்தில் டிவைடர் மீது மோதி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை