மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்...
10-Dec-2024
பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே மது போதையில் உறவினர்களை வம்புக்கு இழுத்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். கதிர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 34. திருமணமாகி குடும்பத்தை பிரிந்து மது போதைக்கு அடிமையானார். அண்ணன் வீட்டு முன் அமர்ந்திருந்த தனது சித்தி கலையரசியை செந்தில்குமார் மது போதையில் திட்டினார். இதில் ஏற்பட்ட பிரச்னையில் கலையரசி, கணவர் மாயாண்டி, மகன் வேல்முருகன், உறவினர் ராஜ்குமார் ஆகியோர் செந்தில்குமாரை கம்பு, கட்டை, கையால் தாக்கினர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் இறந்தார். இவ்வழக்கில் நால்வரையும் பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
10-Dec-2024