உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

 பா.ஜ., நிர்வாகியிடம் மோசடி; காஞ்சிபுரம் வாலிபர் சிக்கினார்

வடமதுரை: பா.ஜ., ஒன்றிய தலைவரின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி, 24.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த காஞ்சிபுரம் வாலிபரை, ஓராண்டிற்கு பின், போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பா.ஜ., ஒன்றிய தலைவர் வீரப்பன், 43. இவர், டிப்ளமா படித்த தன் மகன் செல்லப்பாண்டிக்கு அரசு வேலை வாங்க, நண்பரான திண்டுக்கல், மேட்டுப்பட்டி சரவணனை அணுகினார். அவர், 'பொதுப்பணித்துறையில் வேலை வாங்கலாம்' எனக்கூற, வீரப்பன், 16 லட்சம் ரூபாயை சரவணனிடமும், சின்ன காஞ்சிபுரம், பெரியகோட்டை கவுரிசங்கர், 32, என்பவருக்கு 3 லட்சம் உட்பட ஐந்து பேருக்கு, 24.30 லட்சம் ரூபாய் கொடுத்தார். திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் பெயரில், போலி பணி நியமன உத்தரவை சரவணன் தயார் செய்து, வீரப்பனுக்கு அனுப்பினார். பணியில் சேர சென்றபோது, அது போலி உத்தரவு என்பது தெரிந்தது. இதுதொடர்பான புகாரில், 2024 ஆகஸ்டில் சரவணனை வடமதுரை போலீசார் கைது செய்தனர். நேற்று கவுரிசங்கர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ