அபிராமி அம்மன் கோயில் சித்திரை விழா ஏப்.29ல் துவக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மே 10 வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 8 ல் திருக்கல்யாணம் , மே 9ல் தேரோட்டம் நடக்கிறது. மே 10 ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.