வாகனங்களில் ஆபத்து பயணங்களால் தொடரும் விபத்துக்கள்...
லோடு டிராக்டரால் அச்சம் : திண்டுக்கல் நகரில் டிராக்டரில் அதிகளவில் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. பள்ளம்மேடுகளில் ஏறும்போது அதிலிருக்கும் பொருட்கள் கீழே விழுவதால் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. இதைத்தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.--பரணிதரன், திண்டுக்கல்.ஆபத்து பயணங்களால் விபத்து : கோபால்பட்டியிலிருந்து அதிகாரிப்பட்டி செல்லும் ரோட்டில் சரக்கு வாகனங்களில் பொது மக்களை ஏற்றி செல்லும் ஆபத்து பயணம் அதிகரித்துள்ளது. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. போக்குவரத்து துறை அதிகாரிகள்,போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அறிவு, கன்னியாபுரம்.-நடுரோட்டில் மின்கம்பம் : பாகாநத்தம் மலைப்பட்டி ரோடு காலனி தெருவின் நடுவே மின்கம்பம் உள்ளது. அவரச காலங்களில் வாகனங்களை வீடுகள் வரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பிரமணி, அய்யலுார்.--------சாய்ந்தநிலையில் பெயர்பலகை : திண்டுக்கல் கோபாலசமுத்திரம் மேற்கு கரை பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. சாய்ந்த நிலையில் உள்ள பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலச்சந்தர், திண்டுக்கல்.சேதமான வாய்க்கால்கள் : குஜிலியம்பாறை ஒன்றியம் திருக்கூர்ணம் ஊராட்சியில் குடகனாறு பாசனத்திற்கான கிளை வாய்க்கால்கள் சேதமடைந்துள்ளது. இதனால் தண்ணீர் வரத்தின்றி கிடக்கிறது. இந்த வாய்க்கால்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜி.ஆர்.ராஜகோபால், திருக்கூர்ணம்.-குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல்- கரூர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு கலெக்டர் அலுவலகம் அருகே குப்பை குவித்து வைத்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் குப்பைகள் பறந்து சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.-கவுசல்யா, திண்டுக்கல்.---தொற்றுபரப்பும் கழிவுநீர் : திண்டுக்கல் முனியப்பன் கோயில் தெருவில் சாக்கடை கால்வாயில் கழிவுகள் தேங்கி உள்ளது. இதனால் மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வினோத் குமார் திண்டுக்கல்.----