உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை

கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை

திண்டுக்கல் : தாடிகொம்பு பெருமாள் கோயிலின் பல கோடி மதிப்பிலான சொத்துக்களை துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்து மீட்கப்படும் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லையடுத்த தாடிக்கொம்பு பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தனி நபர் அபகரிப்பு செய்து உள்ளதாக ஹிந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி கூறியதாவது : திண்டுக்கல் ஹிந்து முன்னணி துணைத்தலைவர் வினோத் ராஜ் அறநிலைத்துறை இணை ஆணையரிடம் அளித்த புகாரில், தாடிக்கொம்பு பெருமாள் கோயில் கட்டளை சொத்துக்களை 28 ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளதாக தகுந்த ஆவணங்களுடன் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் கள ஆய்வு செய்து சட்டவிதிகளுக்குட்பட்டு கோயில் சொத்துக்களை அபகரித்த நபரின் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சொத்துக்கள் மீட்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி