உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அடாவடியால் அவதி : காஸ் விலையை விட ரூ. 50 கூடுதல் வசூல்

அடாவடியால் அவதி : காஸ் விலையை விட ரூ. 50 கூடுதல் வசூல்

25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கிராமங்களில் பெரும்பாலானோர் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். மத்திய அரசு திட்டத்தின் மூலம் இலவசம், மானிய விலையில் வீடுகள் தோறும் சமையல் காஸ் சிலிண்டர்கள்,அடுப்புகள் வழங்க தற்போது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சமையல் காஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது. காஸ் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டது. இவர்களுக்கு காஸ் ஏஜன்சி டெலிவரி நபர்களால் வீடுகளுக்கே சென்று காஸ் விநியோகம் நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் சமையல் காஸ் 540 என்ற நிலையில் தற்போது ரூ.845 என விலை உயர்ந்துள்ளது.இக்கடுமையான விலை ஏற்றத்தால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் குடும்பத்தலைவிகள் செலவுகளை சமாளிக்கமுடியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் காஸ் டெலிவரி செய்யும் நபர் கள் பில் தொகையை விட கூடுதலாக ரூ.50முதல் 70 வரை கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். கேட்டால் இதை தான் காஸ் ஏஜன்சிகள் சம்பளமாக வழங்குவதாக கூறுகின்றனர். மேலும் கேள்வி கேட்டால் காஸ் வழங்குவதை வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். இதன் மூலம் மக்கள் பாதிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.Martin Manoj
நவ 16, 2024 12:09

பத்து வருடம் முன்பு ஒரு சீர்கேடான் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கேஸ் விலை பெட்ரோல் விலை குறைப்போம் என்று வந்தான் இன்னை வரைக்கும் ஒர் மண்ணும் பண்ணல


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 15, 2024 22:10

கேஸ் கம்பெனி அருகாமையில் இருக்குமானால் நீங்களே சென்று எடுத்து வரலாம். கேஸ் விலையில் இருபது ரூபாய் கழித்துக்கொள்வார்கள். சட்டப்படி கழித்துக் கொள்ள வேண்டும்


Sekar Times
நவ 15, 2024 12:27

சிலிண்டர் டெலிவரிமேன்கள் 50ருபாய் கட்டாய வசூல் செய்கின்றனர்.சராசரி ஒரு நாளைக்கு நூறு சிலிண்டர் சப்ளை செய்து நாளொன்றுக்கு 5000ரூபாய் சுரண்டி வாழ்கின்றனர்.வருமானவரித்துறை இவர்களின் வீடுகளில் ரெய்டு செய்தால் கொள்ளைக்கூட்டத்தின் முகம் கிழியும்.


VENKATASUBRAMANIAN
நவ 15, 2024 08:18

உடனே புகார் அளிக்கலாம் கேஸ் ஏஜென்சி நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் கம்பெனிக்கு புகார் கொடுக்க லாம்


Amalesh Kumar
நவ 15, 2024 08:15

மத்திய அரசின் கீழ் செயல்படும்.. துறை நிறுவனம்.. அந்த மாவட்டத்தின் கீழ்.. உயர் அதிகாரிகள் உள்ளனர்.. மத்திய அரசுக்கு குறைகள் நிவர்த்தி செய்ய.. கீழ்கண்ட இணையதளத்தில் பதிவு செய்தால்.. இந்த மாவட்ட பெட்ரோல் துறை ஐஏஎஸ் அதிகாரி அவர்கள்.. உங்களுக்கு விளக்கம் கடிதம் தான் கிடைக்கப்பெறும்..